தமிழால் துதி

தமிழால் துதி இணையதளம் தமிழ் வழி பூசை மற்றும வழிபாடுகளை மீண்டும் அனைத்து இல்லங்களிலும் கோயில்களிலும் சென்றடைய வழிவகை செய்து வருகிறது.

+91 875 444 2644 – Call / whatsapp

தமிழால் துதிப்போம், தமிழ் வாழ்க! தமிழ் வளர்க!!

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மண்ணில் இன்று தமிழர்கள் தங்கள் அன்றாட வழிபாடுகளை அந்நிய மொழியில் செய்து வருகிறார்கள்,

கிபி 12ஆம் நூற்றாண்டு வரை அனைத்து கோயில்களிலும் வீடுகளிலும் செந்தமிழில் வழிபாடுகள் நடைபெற்றன என்பதற்கான ஆதாரங்களை கல்வெட்டுகளும்  நூல்களும் பறைசாற்றுகின்றன, 13 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு தமிழ் மண்ணை ஆண்ட மன்னர்களின் கட்டளையால் தமிழ் விலக்கப்பட்டு வடமொழி கோயில்களில் பூசைகளில் வந்தேறியது.

+91 875 444 2644 – Call / whatsapp

உங்கள் ஊர் கோவில்  பூசைகள் (கும்பாபிஷேகம்), இல்ல சடங்குகளை தமிழ் வழியில் நிகழ்த்திட எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

எந்த செயலை துவங்குவதாக இருந்தாலும் முழு முதற் கடவுளான கணபதியை வணங்கி விட்டு, அவருக்குரிய பூஜைகள், வேள்வி (ஹோமம்) ஆகியவற்றை செய்த பிறகே அந்த செயலை துவங்குவது இறை நம்பிக்கையாளர்களின் வழக்கம். கணபதியை வணங்கி விட்டு செய்யும் செயல்கள் அனைத்தும் எந்த வித தடையும் இன்றி, வெற்றிகரமாக நிறைவடையும் என்பது நம்பிக்கை.

புது வீடு கட்டி அங்கு நாம் குடி போகும் நாளில் நடத்தப்படும் சடங்கு புதுமனை புகு விழா. புதிய வீட்டில் நாம் மகிழ்ச்சியாக வாழ சில தெய்வீக சடங்குகளை பின்பற்றி, புனித நீரால் வீடு முழுவதையும் சுத்தப்படுத்தி, பூசை செய்வதன் மூலம் “எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பெருகும்”, புதிய வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு அமைதியும் நல்லிணக்கமும் கிடைக்கும்.

பண்டைத் தமிழர் தம் வாழ்க்கையில் ‘களவொழுக்கம்’, ‘கற்பொழுக்கம்’ ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர்

பண்டைத் தமிரின் மணச்சடங்கினைப்பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில்

“பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர்” எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர்.

‘கரணம்’ என்ற ‘திருமணம்’ வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று.

எனவே, ‘களவு மணம்’, ‘கற்பு மணம்’ இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே ‘கற்பு நெறி’ எனப்பட்டது

குழந்தைக்கு ஏறத்தாழ ஐந்தாவது மாதம் வரை தாய்ப்பால் உணவே போதுமானதாக இருக்கும் ஆனால் இவ்வாறு ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்கு மேல் தாய்ப்பால் மட்டுமே உடலை வளர்க்க போதுமானது அல்ல எனவே நீர்த்த ‘திரவ உணவில்’ இருந்து மெத்தனத்தாகும் ‘திட உணர்விற்கு’ குழந்தையை ஆயத்தம் செய்தல் வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் அரிசி உணவு தொடக்கம். வட இந்தியாவில் கோதுமை உணவு தொடக்கம், இப்படி அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப திட உணவு மாறும்.

சிலர் குழந்தையை கோயிலுக்கு கொண்டு சென்று அங்கே மடப்பள்ளியில் சமைத்து அந்த உணவை இறைவனுக்கு படைத்து, பிறகு குழந்தைக்கு  ஊட்டுவர்.  நம் வீட்டுக்கு குழந்தைக்கு நம் வீட்டு உணவை

இறைத்தொடர்போடு ஊட்டுவது தானே சிறப்பு, எனவே

இந்த வழிபாட்டினை வீட்டிலேயே செய்யலாம். கலசம் வைத்து வேள்வி செய்து அந்த வேள்வித்தியில் சமையல் செய்து இறைவனுக்கு அமுது படைத்து பிறகு குழந்தைக்கு ஊட்டலாம்


தமிழால் துதி

தாய்மொழியில் வழிப்பாடு



Information