சிவமயம்
பஞ்சபுராணம்
ஞாயிற்றுக்கிழமை 1
தேவாரம்
செல்வ நெடுமாடம் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வ வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்தும் செல்வஞ் செல்வமே.
திருவாசகம்
ஆடு கின்றலை கூத்துi யான் கழற்(கு)
அன்பிலை: என்புருகிப்
பாடு கின்றலை: பதைப்பதும் செய்கிலை
பணிகிலை: பாதமலர்
சூடுகின்றலை: சூட்டுகின் றதுமிலை:
துணையிலி பிணநெஞ்சே!
தேடுகின்றலை தெருவுதோ றலறிறை:
செய்வ தொன்ற றியேனே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே ! உலப்பிலா ஒன்றே !
உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே !
திருப்பல்லாண்டு
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள்
வஞ்சகர் போயகலப்
பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி எல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன
அடியோமுக்கு அருள்புரிந்து
பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்:
அலகில் சோதியன்: அம்பலத்து ஆடுவான்:
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவோம்.
திருச்சிற்றம்பலம்
******
திங்கட்கிழமை 2
தேவாரம்
தொண்டரஞ்சு களிறும் அடக்கிச் சுரும்பார்மலர்
இண்டைகட்டி வழிபாடு செய்யு மிடமென்பரால்
வண்டுபாட மயிலால் மான்கன்று துள்ளக்கவரி
கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே
திருவாசகம்
உடையாள் உன்றன் நடுவிருக்கும்
உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியேன் நடுவுள் இருவீரும்
இருப்ப தானால் அடியேன்உன்
அடியார் நடவு ளிருக்கும்
அருளைப் புரியாய்பொன் னம்பலத்தெம்
முடியா முதலே என்கருத்து
முடியும் வண்ணம் முன்னின்றே.
திருவிசைப்பா
நீறணி பவளக் குன்றமே! நின்ற
நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே
வேறணி புவனபோகமே! யோக
வெள்ளமே! மேருவில் வீரா!
ஆறணி சடைஎம் அற்புதக் கூத்தா!
அம்பொன்செய் அம்பலத் தரசே!
ஏறணி கொடிஎம் ஈசனே! உன்னைத்
தொண்டனேன் இசையுமாறு இசையே!
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் :
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் :
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட் செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர்
ஆனந்த வெள்ளப் பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப்பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் : மீண்டும்
பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும்: இன்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி
அறவா! நீ ஆடும் போதுஉன்
அடியின்கீழ் இருக்க என்றார்.
திருச்சிற்றம்பலம்
செவ்வாய்க்கிழமை 3
தேவாரம்
கானருகும் வயலருகுங் கழியருகுங் கலரும்
மீனரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தம் சென்று உரையாயே.
திருவாசகம்
வேதமும் கேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச்
சோதியு மாய் இருள் ஆயினார்க்குப்
துன்பமு மாய் இன்பம் ஆயினர்க்குப்
பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய் வீடும் ஆயினார்க்கு
ஆதியும் அந்தமும் ஆயினாருக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே.
திருவிசைப்பா
ஏகநாயகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை, எதிர்இல்
போகநாயகனைப், புயல்வனற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா ஊர்ந்த
மேகநா யகனை, மிகு திருவீழி
மிழலை வீண் ணிழி செழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே
திருப்பல்லாண்டு
சொல்லாண்ட சுருதிப் பொருள் சோதித்த
து}ய்மனத் தொண்டருள்வீர்,
சில்லாண் டிற்சிதை யும்சில தேவர்
சிறுநெறி சேராமே
வில்லாண்டகன கத்திரள் மேரு
விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந் தானுர்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
திருவுடைய தில்லைவாழ் அந்தணர்கள் கைதொழுதார்:
பரிவரிய தொண்டர்களும் பணிந்துமனம் களிபயின்றார்:
அருமறைசூழ் திருமன்றில் ஆடுகின்ற கழல்வணங்க
வருகின்றார் திருநாளைப் போவாரம் மறைமுனிவர்.
திருச்சிற்றம்பலம்
******
புதன்கிழமை 4
தேவாரம்
ஒன்றி யிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக்
கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச்
சென்று, தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்து நட்டம்
என்றுவந் தாய்என்னும் எம்பெருமான் தன்திருக்குறிப்பே.
திருவாசகம்
சிரிப்பாய் களிப்பார் தொனிப்பார்
திரண்டு திரண்டுன் வார்த்தை
விரிப்பார் கேட்பார் மெச்சுவார்
வெள்வே றிருந்துன் திருநாமத்
தரிப்பார் பொன்னம் பலத்தாடுந்
தலைவா என்பார் அவர்முன்னே
நரிப்பாய் நாயேன் இருப்பேனோ
நம்பி இனித்தான் நல்காயே.
திருவிசைப்பா
நையாத மனத்தினை நைவிப்பான் இத்தெருவே
ஐயாநீ! உலாப்போந்த அன்றுமுதல் இன்றுவரை
கையாரத் தொழுதுஅருவி கண்ணாரச் சொரிந்தாலும்
செய்யாயோ அருள்? கோடைத் திரைலோக்கிய சுநதரனே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவுபெற் றேன்பெற்ற
தார்பெறு வார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமை மணவாளனுக்கு ஆள்
பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
செங்கண் விடையார் திருமலர்க்கை
தீண்டப் பெற்ற சிறுவனார்
அங்கண் மாயை யாக்கையின்மேல்
அளவின்று உயர்ந்த சிவமயமாய்ப்
பொங்கி எழுந்த திருவருளின்
மூழ்கிப் பூமேல் அயன்முதலாம்
துங்கவமரர் துதி செய்யச்
சூழ்ந்த ஒளியில் தோன்றினார்.
திருச்சிற்றம்பலம்
வியாழக்கிழமை 2
தேவாரம்
நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்அடி யேனையும் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.
திருவாசகம்
மாய னேமறி கடல்விடம் உண்ட
வான வாமணி கண்டத்தெம் அமுதே
நாயினேன் உனை நினையவும் மாட்டேன்
நமச்சிய வாயஎன் றன்னடி பணியாப்
பேய னாகிலும் பெருநெறி காட்டாய்
பிறைகு லாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
சேய னாகிநின் றலறுவ தழகோ
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே.
திருவிசைப்பா
மின்னார் உருவம் மேல்வி ளங்க
வெண்கொடி மாளிகை சூழல்
பொன்னார் குன்றம் ஒன்று வந்து
நின்றது போலும் என்னாத்
தென்னா என்று வண்டு பாடும்
தென்தில்லை யம்பலத்துள்
என்னா ரமுதை எங்கள் கோவை
என்று கொல் எய்துவதே!
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
பெரியபுராணம்
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்புஎன்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவுஎன்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்குஇனிய வாம்என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு; அறிநீ என்று அருள் செய்தார்.
திருச்சிற்றம்பலம்
******
வெள்ளிக்கிழமை 6
தேவாரம்
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்
சுடரே செழுஞ்சுடர் நற்சோமிமிக்க
உருவேயென் உறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினை நோய் அடையாவண்ணம்
ஆடுவடு தண்துறை உறையும் அமரரேறே.
திருவாசகம்
பிட்டு நேர்பட மண்சு மந்த
பெருந்து றைப்பெரும் பித்தனே
சட்ட நேர்பட வந்தி லாத
சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்
சிட்ட னேசிவ லோக னேசிறு
நாயி னுங்கடை யாயவெங்
கட்டனேனையும் ஆட்கொள் வான்வந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே.
திருவிசைப்பா
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய்
ஆரா அமுதாய்க்
கல்லால் நிழலாய்! கயிலை மலையாய்!
காண அருள் என்று
பால்லா யிரம்பேர் பதஞ்ச லிகள்
பரவ வெளிப்பட்டுச்
செல்வாய்மதிலின் தில்லைக் கருளித்
தேவன் ஆடுமே.
திருப்பல்லாண்டு
தாதையைத் தாள்அற வீசிய சண்டிக்கவ்
வண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற் கோயிலும்
போனக மும்அருளிச்
சோதி மணிமுடித் தாமமும் நாமமும்
தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
திரிபுரம் எரித்தவாறும்
தேர்மிசை நின்றவாறம்
கரியினை உரித்தவாறும்
காமனைக் காய்ந்தவாறும்
அரிஅயற்கு அரியவாறும்
அடியவர்க்கு எளியவாறும்
பிரிவினர் பாடக் கேட்டுப்
பரமனார் அருளினாலே.
திருச்சிற்றம்பலம்
******
சனிக்கிழமை 7
தேவாரம்
பொன்னார் மேனியனே புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழ பாடியுள் மாணிக்கமே
அன்னே உனையல்லால் இனி யாரை நினைக்கேனே.
திருவாசகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறிவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தன்எனக் கருளியவாறு யார்பெறுவார் அச்சோவே!
திருவிசைப்பா
எழுந்தருளாய் எங்கள் வீதி யூடே
ஏதமில் முனவரோ டெழுந்த ஞானக்
கொழுந்தது வாகிய கூத்த னேநின்
குழையணி காதினின மாத்தி ரையும்
செழுந்தட மலர்புரை கண்கள் மூன்றும்
செங்கணி வாயும் என் சிந்தை வெளவ
அழுந்தும் என் ஆருயிர்க் கென்செய் கேனோ
அரும்புனல் அலமரும் சடையினானே!
திருப்பல்லாண்டு
எந்தைஎன் தாய்சுற்றம் முற்றும் எமக்கமு
தாம்எம் பிரான்என் றென்று
சிந்தை செய்யும் சிவன் சீரடியார்
அகுநாய் செப்புரை
அந்தமில் ஆனந்தச் சேந்தன் எனைப்புகுந்(து)
ஆண்டுகொண் டாருயிர்மேற்
பந்தம் பிரியப் பரிந்தவ னேஎன்று
பல்லாண்டு கூறுதுமே.
பெரிய புராணம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
மன்று உளார் அடியார் அவர் வான்புகழ்
நின்றது: எங்கும் நிலவி உலகெலாம்.
திருச்சிற்றம்பலம்
திருமுறைகள் ஓதும் (பாராயணம்) முறை
காலையில் ஐந்து மணிக்கெல்லாம் துயிலெழுந்து நீராடி, திருநீறணிந்து, உருத்திராட்சம் (இருப்பின்) அணிந்து பூசை அறையில் கிழக்கு அல்லது வடக்குத் திசை நோக்கி அமர வேண்டும்.
முதலில் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும். பிறகு விநாயகப்பெருமானைத் துதிக்க வேண்டும். இதனை அடுத்து நால்வர் துதிப்பாடல்ளைப் பாடவேண்டும். அதன் பின்னரே, அவரவர்கள் விரும்பும் பதிகங்களைப் பக்தி சிரைத்தையுடன் ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஓதுதல் வேண்டும். “பக்திமையாலே பாடியும் ஆடியும் பயிலவல்லோர்கள். விண்ணவர் விமானம் கொடுவர ஏறி வானுலகாண்டு வீற்றிருப்பவர் தாமே” என்பது திருஞான சம்பந்தப் பெருமானார் வாக்காகும்.
திருமுறை பதிகங்களை ஓதிப் பெறமுடியாத செல்வம் உலகில் இல்லை. இது சத்தியமாகும். இதை அவரவர்களே அனுபவித்த உணரலாம.;
பதிகங்களைத் துவங்குவதற்கு முன்பாகவும் முடித்த பின்னரும் திருச்சிற்றம்பலம் என்று கூறுதல் வேண்டும்.
“சிவமே நமக்குப் பொருள்”
திருச்சிற்றம்பலம்.
சிவாலயம் தரிசனம் விதிமுறை
1. ஆலய தரிசனம் செய்வோர் நீராடி, துய உடை அணிந்து திருநீர் உருத்திராக்கம் போன்றவை அணிந்து கொண்டு செல்லவேண்டும.
2. வெற்றிலை, பாக்கு, பழம் தேங்காய், மலர்கள் முதலிய வழிபாட்டுப் பொருட்களைக் கொண்டு போகலாம்.
3. முதலில் ஆலய கோபுரத்தை வணங்கவேண்டும்.
4. உள்ளே சென்று கொடி மரத்தின் முன்னே, ஆண்கள் தலை, மோவாய், இரு கைகள், இரு புயங்கள், முழந்தாளிரண்டு ஆகிய எட்டும் நிலத்தில் படுமாறு அஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். பெண்கள், தலை, இருகைகள், இருமுழங்கால்கள் ஆகிய ஐந்தும் நிலத்தில் படுமாறு பஞ்சாங்க நமஸ்காரம் செய்யவேண்டும்.
5. கொடி மரத்தின் எதிரில் வணங்கிய பின் நந்தி தேவரிடம் விடைபெற வேண்டும். (மானசீகமாக விடைபெறுதல் மிக அவசியம்)
6. நந்தி தேவரிடம் விடை பெற்றுக்கொண்ட பிறகு விநாயகரை ஒருமுறையும், சிவபெருமானை ஐந்து முறையும், அம்பாளை நான்கு முறையும், நவக்கிரகங்களை ஒன்பது முறையும், வலம் வந்து வணங்கவேண்டும்.
7. சமயாச்சாரியர்கள், நடராசபெருமான், பிறதெய்வங்;கள் யாவற்றையும் வணங்கிவிட்டு, இறுதியாக, சண்டேசுவர நாயனாரை அடைந்து மும்முறை கைகளால் தாளமிட்;டு, சிவதரிசனப் பலனைத் தந்தருளும்படி வேண்டுதல் அவசியமாகும்.
8. சண்டேசுவர நாயனரிடம் சிவதரிசனப் பலனை பெற்ற பிறகு, கொடிமரத்தின் அருகில் வடக்கு முகமாக அமர்ந்து திருவைந்தெழுத்தை
(ஓம் சிவாய நம) 108 முறை தியானித்தல் வேண்டும்.
9. இறுதியாக, வைரவரை வணங்கி சிவசொத்து எதையும் எடுத்து செல்லவில்லை என்று உறுதி கூறி கோயிலை விட்டு வெளியே வருதல் வேண்டும்.
அன்றாடம் திருக்கோயில் செல்ல முடியதவர்கள் குறிப்பிட்ட புண்ணிய நாட்களிலாவது அவசியம் சென்று வணங்க வேண்டும். கட்டாயமாக சிவத்தல யாத்திரைகளை மேற்கொள்ள வேண்டும்.
இப்படி சிவபுண்ணியம் பெறவிரும்பும் சைவப்பெருமக்கள், ஆலயதரிசனதுடன் நின்றுவிடக் கூடாது. எல்லாவித வழிபாட்டின் சாரமாவது, து}ய உள்ளதுடன் பிறருக்கு நன்மை செய்வதே ஆகும். ஏழை எளிய மக்கள். நோயுற்றவர்கள் ஆகியவர்களிடம்.
கடவுளைக் கண்டுஅவர்கட்குச் சேவை செய்து உதவி செய்கின்றவர்கள் தான் சிவபெருமானின் இன்னருளுக்குப் பாத்திரமாகிறார்கள் சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புவார்கள், அவருடைய படைப்புக்களாகிய உலகில் உள்ள எல்லா ஜீவராசிகட்கும் சேவை செய்ய முற்படவேண்டும்.
சுயநலமின்மையே உண்மையான சமயப் பற்றுக்குச் சான்றாகும். ஒருவன் எவ்வளவுக்குத் தன்னலமின்றிப் பிறருக்கென வாழ்கிறானோ. அந்த அளவிற்கு அவன் ஆத்ம ஞானம் பெற்றுச் சிவபெருமான் அருகே இருக்கும் அருகதையுள்ளவனாகிறான்.
அப்படியின்றி சுயநலமிக்க ஒருவன், எல்லா ஆலயங்கட்கும் சென்று அபிடேகம், ஆராதனை செய்திருப்பினும், அவன் சிவபெருமானை விட்டு வெகுது}ரம் விலகியுள்ளவனே ஆகிறான் என்பது விவேகானந்த சுவாமிகளின் அருள்வாக்காகும்.
எனவே கடவுளை வணங்கும் நாம் அனைவரும் மிகுந்த கருணைஉடையவர்களாக இருத்தல் வேண்டும். கருணையால் மட்டுமே கருணாகரக் கடவுளை அடையலாம் அல்லது வேறு வழி இல்லை.
திருச்சிற்றபலம்.
சனிகிரகத்தால் வரும் எல்லாவித தோஷமும்
போக்கி நலம் தரும் பதிகம்
சனிபகவானால் வரும் தோஷங்கள் நீங்க யாவரும் திருநள்ளாறு செல்வது தெரிந்ததே. சம்பந்தமப் பெருமான் பாடியருளிய இப்பதிகம் அனல்வாதத்தின் போது வேகாமல் நின்ற பச்சை பதிகமாகும் இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்களும்; வினையினால் (சனிகிரகத்தினால்) பாதிக்கபடமாட்டர்கள் என்பது சொல்லாமல் விளங்கும்.
திருச்சிற்றபலம்
போகமர்த்த புண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவாண ஆடையின் மேல்
நாகமர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே 1
தோடுடைய காதுடையான் தோலுடையான் தொலையாப்
பீடைய போர்விடையான் பெண்ணுமோர் பாலுடையான்
ஏடுடைய மேலுலகோடு ஏழ்கடலுஞ் சூழ்ந்த
நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே 2
ஆன்முறையா லாற்று வெண்ணிறாடி அணியிழையோர்
பான் முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவும் சூலமும் பற்றிய கை
நான் மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே 3
புல்கவல்ல வார்சடை மேற்பூம்புனல் பெய்தலே!
மல்கவல்ல கொன்றை மாலை மதியோடுடன் சூடிப்
பல்கவல்ல தொண்டர் தம் பொற்பாத நிழற்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே 4
ஏறுதாங்கி யூர்திபேணியேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடரவஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிறை கொன்றை
நாறு தாங்கும் நம்பெருமான் மேயது நள்ளாறே 5
திங்களுச்சி மேல்விளங்கும் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவான் என்றடியே யிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடியார் கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே 6
வெஞ்சுடர்த்தீ அங்கையேந்தி விண் கொண்முழவதிர
அஞ்சிடைத்தோர் ஆடல் பாடல் பேணுவதன்றியும் போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள் சூடித்திகழ்தரும் கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே 7
சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீறாடுவதன்றியும் போய்ப்
பட்ட மார்ந்த சென்னிமேலோர் பால்மதியஞ்சூடி
நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே 8
உண்ணலாகா நஞ்சு கண்டத்துண்டுடனே யொடுக்கி
அண்ணலாகா வண்ணல் நீழல் ஆரழல் போலுருவம்
எண்ணலாகாவுள் வினை என்று எள்க வலித்து இருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 9
மாசு மெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணம் இலிகள்
பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறிச்செல்லன் மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதிலும் உடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே 10
தண்புனாலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்பு நல்லார் மல்கு ஞானசம்பந்தன் நல்ல
பண்பு நள்ளாறேத்து பாடல் பத்தும் இவைவல்லார்
உண்பு நீங்கி வானவரோடு உலகிலுறைவாரே 11
(பதிகம் முற்றிற்று)
திருச்சிற்றம்பலம்
Leave a Reply